Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Tuesday 27 June 2017

24.06.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) இந்தியாவின் முதல்____________ மிஷன் சூரியன் பற்றிய ஆராய்ச்சிக்கு உதவுகிறது.
(A) மங்கள்யான்
(B) மாம் 3S
(C) ஆதித்யா L1
(D) சன் 1A
Show Answer

Answer-(C) ஆதித்யா L1
Explanation:
1. செயற்கைக்கோள் ஓன்று சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள லெக்ராஞ்சியப் புள்ளிகள் 1 (L1) இல் நிலைநிறுத்தப்படும்.
2. இது 2019-2020 இல் விண்ணில் செலுத்தப்படும் .
3. It provides observations of
  • Sun’s Photosphere (Soft & Hard X-ray),
  • Chromosphere (UV) &
  • Corona (Visible & NIR).
  • 4. லெக்ராஞ்சியப் புள்ளிகள் என்றால் என்ன?
  • சூரிய மற்றும் பூமியின் சுற்றுப்பாதை அமைப்பில் இந்த இரண்டின் ஈர்ப்பு விசை தாக்கத்தால் ஓர் சிறிய பொருள் (செயற்கைகோள்) நிலையான இடத்தை தக்கவைத்துக் கொள்ளக்கூடிய புள்ளிகளாகும்.
  • இந்த லெக்ராஞ்சியப் புள்ளிகளில் சூரிய மற்றும் பூமியின் ஈர்ப்புவிசைகளின் கூட்டுவிசை செயற்கைகோள்ஐ சுற்ற தேவையான மையநோக்கு விசையைத் தருகின்றது.
  • இரண்டு சூரிய மற்றும் பூமியின் சுற்றுப்பாதை தளத்தில் இத்தகைய புள்ளிகள் ஐந்து உள்ளன. இவை L1,L2,L3,L4,L5 எனப் பெயரிடப்பட்டுள்ளன.
  • இந்த 5 புள்ளிகளில் ,
  • 1. முதல் மூன்று புள்ளிகள் சூரிய மற்றும் பூமியின் இணைக்கும் நேர்கோட்டில் உள்ளன. .
    2. L4, L5 என்ற புள்ளிகள் சூரிய மற்றும் பூமியின் சமபக்க முக்கோணி முனைகளில் உள்ளன.

    2) பாஸ்போர்ட் சட்டம் _____________ அன்று நடைமுறைக்கு வந்தது.
    (A) 24th June 1957
    (B) 24th June 1967
    (C) 24th June 1977
    (D) 24th June 1987
    Show Answer

    Answer-(B) 24th June 1967
    Explanation:
  • பாஸ்போர்ட் சட்டம், 1967 கொண்டுவரப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது.
  • பாஸ்போர்ட் இப்போது ஆங்கிலத்திலும் இந்தி மொழியிலும் இருக்கும்.

  • 3) தமிழ்நாட்டில் இருந்து ஸ்மார்ட் சிட்டிகளுக்கான திட்டங்களுக்கு எந்த நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?
    (A) திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர்
    (B) வேலூர், மதுரை, தஞ்சாவூர், சேலம்
    (C) கோயம்புத்தூர், சென்னை, ஈரோடு, திண்டுக்கல்
    (D) இவை அனைத்தும்
    Show Answer

    Answer-(D) இவை அனைத்தும்

    Explanation:
    ஸ்மார்ட் சிட்டி மிஷன் ஜூன் 25, 2015 அன்று தொடங்கப்பட்டது.
  • 1 ம் கட்டம் - கோயம்புத்தூர், சென்னை.
  • 2 வது கட்டம் - வேலூர், மதுரை, தஞ்சாவூர், சேலம்.
  • 3 வது கட்டம் - திருச்சூரப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர்.

  • 4) UNDP இன் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG க்கள்) ஜனவரி 2016 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது மற்றும் SDG களில் இலக்குகள் ________ ஆண்டுக்குள் நிறைவடைய வேண்டும்.
    (A) 2015
    (B) 2020
    (C) 2025
    (D) 2030
    Show Answer

    Answer-(D) 2030
    Explanation:
  • நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) (2016-2030) 2012 இல் ரியோ டி ஜெனிரோவில் உள்ள நிலையான அபிவிருத்தி பற்றிய ஐ.நா. மாநாட்டில் உருவாக்கப்பட்டது.
  • இது மில்லினியம் வளர்ச்சி இலக்குகளை (MDGs)(2000-2015) மாற்றியமைக்கிறது.
  • 17 Goals under SDGs:
    1. ஏழ்மை இன்மை
    2. பசி இன்மை
    3. நல்ல ஆரோக்கியம்
    4. தரமான கல்வி
    5. பாலின சமத்துவம்
    6. தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம்
    7. புதுப்பிக்கவல்ல மற்றும் மலிவான சக்தி
    8. நல்ல பணிகள் மற்றும் பொருளாதாரங்கள்
    9. புதுமை மற்றும் நல்ல உள்கட்டமைப்பு
    10. சமமின்மையை குறைத்தல்
    11. நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள்
    12. வளங்களை பொறுப்பான முறையில் பயன்படுத்துதல்
    13. வானிலை நடவடிக்கை
    14. நிலைப்பாடுடைய பெருங்கடல்கள்
    15. நிலத்தின் நிலைப்பாடான பயன்பாடு
    16. அமைதி மற்றும் நீதி
    17. நிலையான அபிவிருத்திக்கான கூட்டமைப்புகள்

    5) இங்கிலாந்தில் ஜூன் 24, 2017 ல் ஆரம்பிக்கப்பட்ட ICC மகளிர் உலக கோப்பையில் இந்திய கேப்டன் யார்?
    (A) மிதிலி ராஜ்
    (B) புனம் ராவுட்
    (C) ஸ்மிருதி மந்தானா
    (D) தீப்தி ஷர்மா
    Show Answer

    Answer-(A) மிதிலி ராஜ்

    6) ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் யார்?
    (A) எமான்யுவேல் மேக்ரோன்
    (B) டொனால்ட் டஸ்க்
    (C) ஜீன்-க்ளூட் ஜுங்கர்
    (D) கிரிஸ்துவர் கெர்ன்
    Show Answer

    Answer-(B) டொனால்ட் டஸ்க்

    Current Affairs Quiz

    No comments:

    Post a Comment