Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Wednesday 28 June 2017

28.06.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) பிதர்க்கணிக்க தேசிய பூங்கா எங்கே அமைந்துள்ளது?
(A) சத்தீஸ்கர்
(B) உத்தரகண்ட்
(C) ஒடிசா
(D) மகாராஷ்டிரா
Show Answer

Answer-(C) ஒடிசா
Explanation:
  • இந்தியாவின் 70% முகத்துவார அல்லது உப்பு நீர் முதலைகள் பிதர்க்கணிக்க தேசிய பூங்காவில்தான் உள்ளது.
  • இங்கு வாழும் முதலைகள் இலைகளால் ஆன மேட்டினை அமைத்து அதன் முட்டைகளை இடும்.
  • மற்ற முதலை இனங்கள் முட்டைகளை மண் தோண்டி இடும்.

  • 2) காசநோய் மற்றும் எச்.ஐ.வி தொற்று நோயைக் கண்டறிதல் மற்றும் ஹெபடைடிஸ் C வைரஸ் தொற்றுகளை அளவிடுவதற்காக WHO வெளியிட்ட சாதனம் ___________.
    (A) GeneXpert
    (B) DNAXpert
    (C) NuclearXpert
    (D) NucleusXpert
    Show Answer

    Answer-(A) GeneXpert
    Explanation:
    1) சமீபத்தில் தேசிய காசநோய் திட்டத்திற்கு இந்தியா 600 GeneXpert சாதனங்களை வாங்கியது.
    2) புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த சாதனம்:
  • இது மைக்ரோ வெவ் ஓவென் அளவு இருக்கும்
  • மூலக்கூறு சோதனைகள் நடத்த முடியும்
  • காசநோய் மற்றும் எச்.ஐ.வி தொற்று நோயை கண்டறிய முடியும்
  • ஹெபடைடிஸ் C-ன் வைரஸ் தொற்றுகளை கணக்கிடலாம்.
  • 3) தேசிய காசநோய் திட்டம் - 1962.
    4) திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டம் – 1993.

    3) லோதா கமிஷன் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை கண்டறிய பி.சி.சி.ஐ-ஆல் நியமிக்கப்பட்ட 7 உறுப்பினர்களை கொண்ட குழுவின் தலைவர் யார்?
    (A) முட்கல்
    (B) ராஜீவ் சுக்லா
    (C) எல். நாகேஷ்வர ராவ்
    (D) நீல தத்தா
    Show Answer

    Answer-(B) ராஜீவ் சுக்லா
    Explanation:
    பி.சி.சி.ஐயின் செயல்பாட்டைக் கவனித்து, அதன் அரசியலமைப்புகளில் மாற்றங்களை பரிந்துரை செய்வதற்காக, ஜனவரி 2015 ல் லோதா குழுமம் உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டது.

    4) ____________ திட்டம் தமிழகத்திலேயே முதன்முதலாக குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்க சேலம் மாநகர காவல்துறை மற்றும் UNICEF நிறுவனம் இணைந்து அறிமுகப்படுத்தியது.
    (A) உதயம்
    (B) நண்பன்
    (C) சூரியன்
    (D) காவலன்
    Show Answer

    Answer-(A) உதயம்
    Explanation:
    உதயம் திட்டமானது தென்னிந்தியாவில் முதல்முறையாக சேலம் மாவட்டத்தில் அறிமுப்படுத்தியுள்ளனர்.

    5) 8 வது சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு 2017 _________ இல் நடைபெறும்.
    (A) சீனா
    (B) இந்தோனேஷியா
    (C) ஜப்பான்
    (D) இந்தியா
    Show Answer

    Answer-(D) இந்தியா
    Explanation:
    2010 ஆம் ஆண்டில் 1-வது சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெற்றது.
    இதற்கு பின் இந்த மாநாட்டை நடத்திய நாடுகள்:
  • துருக்கி
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
  • மலேஷியா
  • மொரோக்கோ
  • கென்யா
  • 2016 ஆம் ஆண்டில் சிலிக்கான் பள்ளத்தாக்கு மாநாட்டை நடத்தியது.
    பிரதம மந்திரி நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இவன்கா டிரம்ப்பை அழைத்துள்ளார்.

    6) இந்தியாவின் மிகப்பெரிய சரக்கு துறைமுகம் ஜவஹர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் _________ ransomeware மூலம் பாதிக்கப்பட்டது.
    (A) Reveton
    (B) Petya
    (C) WannaCrypt
    (D) WannaCry
    Show Answer

    Answer-(B) Petya
    Explanation:
    Ransomware என்பது கணினி அல்லது அதன் தரவை அணுகுவதை தடுக்கும் ஒரு வகை வைரஸ் ஆகும். மேலும் இதை தீர்க்க பணத்தை(பொதுவாக Bitcoin) கோருகிறது.

    Current Affairs Quiz

    No comments:

    Post a Comment