Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Friday 28 July 2017

28.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) யார் 2017ஆம் ஆண்டு ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் ரமோன் மாக்சேசி விருதை வென்ற ஆறு நபர்களில் ஒருவர்?
(A) கெத்ஸி சண்முகம்
(B) கைலாஷ் சத்யார்த்தி
(C) குலண்டி பிரான்சிஸ்
(D) ஹரிஷ் ஹேன்டே
Show Answer

Answer-(A) கெத்ஸி சண்முகம்
Explanation:
ஸ்ரீலங்காவில் போரினால் இடம்பெயர்ந்த விதவைகள் மற்றும் அனாதைகள் ஆகியோருக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கியவர் ஞானதீபம் 'கெத்ஸி' சண்முகம்.
ரமோன் மாக்சேசி விருது:
  • 1957 இல் நிறுவப்பட்டது.
  • பிலிப்பைன்ஸின் 7 வது ஜனாதிபதியின் பெயரால் இது வழங்கப்படுகிறது.
  • இந்த விருதுகள் 6 வகைகளில் வழங்கப்படுகின்றன:
    I. அரசாங்க சேவை,
    II. பொது சேவை,
    III. சமூகத் தலைமை,
    IV. பத்திரிகைகள், இலக்கியம் & கிரியேட்டிவ் கம்யூனிகேஷன் ஆர்ட்ஸ்,
    V. அமைதி மற்றும் சர்வதேச புரிதல்,
    VI. வளர்ந்து வரும் தலைமை பண்பு.

    2) முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் இரண்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு எந்த தீவிற்கு அவரது பெயரை சூட்டி கௌரவிக்கப்பட்டது?
    (A) ராமேஸ்வரம் தீவு
    (B) வீலர் தீவு
    (C) எக்குலலா தீவு
    (D) மன்னார் தீவு
    Show Answer

    Answer-(B) வீலர் தீவு
    Explanation:
    ஒடிசா அரசாங்கம் பத்ரக் மாவட்டத்தில் உள்ள வீலர் தீவிற்கு APJ அப்துல் கலாம் தீவு என்று பெயரிடப்பட்டுள்ளது.

    3) உலக ஹெபடைடிஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் _____________ அன்று அனுசரிக்கப்படுகிறது.
    (A) ஜூலை 28
    (B) ஜூன் 28
    (C) மே 28
    (D) மார்ச் 28
    Show Answer

    Answer-(A) ஜூலை 28
    Explanation:
    உலக ஹெபடைடிஸ் நாள் 2017-க்கான கரு ‘Eliminate Hepatitis’.
    ஹெப்பாடிட்டீஸ் :
    கல்லீரல் திசுக்களின் வீக்கம்.
    வகைகள்:
    ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, ஈ.
    காரணங்கள்:
    i. அசுத்தமான உணவு மற்றும் நீர்,
    ii. பரிசோதிக்கப்படாத இரத்தம்,
    iii. பாதுகாப்பற்ற ஊசி மற்றும் மருத்துவ செயல்முறை,
    iv. பாதுகாப்பற்ற பாலின உறவு,
    v. கர்ப்பிணி பெண்களிடம் இருந்து குழந்தைகளுக்கு பரவுதல்,
    vi. போதை ஊசி பழக்கம்.

    4) ராஜாஜி தேசிய பூங்கா ____________ இல் அமைந்துள்ளது.
    (A) தமிழ்நாடு
    (B) கேரளா
    (C) உத்திரப் பிரதேசம்
    (D) உத்தரகண்ட்
    Show Answer

    Answer-(D) உத்தரகண்ட்
    Explanation:
    1. 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது மற்றும் இது உத்தர்கண்ட் மாநிலத்தின் பாரி கர்வால், டெஹ்ராடூன் & சஹரன்பூர் மாவட்டங்களில் பரவியுள்ளது.
    2. ஜிம் கார்பெட் புலிகள் காப்பகம் 1936 ல் உத்தர்கண்டிலுள்ள நைனிடால் மாவட்டத்தில் நிறுவப்பட்டது.
    3. கர்நாடகத்திற்கு அடுத்தபடியாக உத்தர்கண்ட்ல் அதிக புலிகள் உள்ளன.
  • 2006 புலி கணக்கெடுப்பு படி இந்தியாவில் - 1,411 புலிகள்
  • 2010 புலி கணக்கெடுப்பு படி இந்தியாவில் - 1,706 புலிகள்
  • 2014 புலி கணக்கெடுப்பு படி இந்தியாவில் - 2,226 புலிகள்
  • 4. 2014 புலி கணக்கெடுப்பு படி, 2010 கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் 30% அதிகரித்துள்ளது.
  • கர்நாடகா - 408 புலிகள்
  • உத்தர்கண்ட் - 340 புலிகள்
  • மத்தியப் பிரதேசம் - 308 புலிகள்
  • தமிழ்நாடு - 229 புலிகள்
  • 5. இந்தியாவில், புலிகள் கணக்கெடுப்பு தேசிய புலிகளின் பாதுகாப்பு ஆணையம் (NTCA) ஒவ்வொரு 4 ஆண்டு இடைவெளியில் கணக்கெடுப்பு மேற்கொள்கிறது.

    Current Affairs Quiz

    No comments:

    Post a Comment